சேலம்.
S.K, சுரேஷ்பாபு.
2024 - 2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கோலாகலம்.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அந்த சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் ஜெ.மு . இமயவரம்பன், செயலாளராக வழக்கறிஞர் முருகன் மற்றும் பொருளாளராக வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவராக வழக்கறிஞர் சரவணன், துணை செயலாளர்களாக ஜோதி, முருகன், நூலகராக வழக்கறிஞர் மணிவண்ணன், செயற்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் சிராஜுதீன், ஜனா, கவிதா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான பதவியேற்பு விழா சேலம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த பதவியேற்பு விழாவிற்கு பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கினார். தேர்தல் அலுவலர்கள் வழக்கறிஞர்கள் ஜனார்த்தனன், கோவிந்தராஜன், தீனதயாளன் மற்றும் திவ்யா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2024 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தம்பிதுரை, மதன், மோகன், துரைராஜ், மணிகண்டன், பாலாஜி உள்ளிட்டோரும், வழக்கறிஞர்கள் P.N. மணி, K.M. ஜெயபால், சிவன், பொன் மதிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா நிறைவு விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி சுமதி உள்ளிட்ட நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: