ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.
இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழைப்பொழிவு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே, தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,896 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 64.00 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64.74 அடியாக உயர்ந்தது.
அதேபோல், அணையில் நீர் இருப்பு 8.61லிருந்து 8.88 டிஎம்சியாக அதிகரித்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
0 coment rios: