திங்கள், 17 ஜூன், 2024

சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு... விரைந்து முடிக்காவிட்டால் தனது தலைமையில் போராட்டம் என எச்சரிக்கை.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிவதாபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் கால்வாய் பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்..... சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் எச்சரிக்கை. 

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட சிவதாபுரம் பகுதி சிறு மழை ஏற்பட்டாலும் மழைநீர் அந்த பகுதியில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சிவதாபுரம் பகுதியை நேரில் மூழ்கும் நிலையில் இருந்து வருகிறது. மேலும் மழை நீரில் செல்லும் வாகனங்கள் மிதந்து தான் செல்ல வேண்டி இருக்கும். இப்படி வருடத்தில் நான்கு மாதங்கள் இந்த நிலையை தொடர்ந்து வருகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட இரா. அருள் அவர்களிடம்  மழைநீர் செல்ல ஏதுவாக மழை நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவுடன் மழைநீர் கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆடுகளாக சட்டமன்றத்தில் தொடர்ந்துவலியுறுத்தி, இரண்டு கட்டங்களாக செஞ்சிக்கோட்டை ஆறு கோடி ரூபாயும், சிவதாபுரம் பகுதிக்கு எட்டு கோடி ரூபாய் நிதியைப் பெற்று தந்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 
நடைபெறும் பணிகள் அனைத்தும் தரமற்றதாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.  அருள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, அதிகாரிகளிடமும் பேசி பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். செஞ்சி கோட்டை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை செய்யவிடாமல் தடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஓடையை உறைந்து கையகப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடத்திலும் பேசினார். நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மழைக்காலம் தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மேற்கொள்வேன் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு பணியின் போது, பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் சேகர், இளைஞர் சங்கத் துணைச் செயலாளர் சிவதாபுரம் அருண், பகுதி செயலாளர் அமையவேல், டிவிஷன் செயலாளர் குமார், கோவிந்தன், சஞ்சய், கார்த்தி ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: