பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் ஷேர் ஆட்டோவில் பொதுமக்கள் தொங்கியபடி பயணம் செய்த சம்பவம் தற்போது ஈரோட்டில் அரங்கேறி உள்ளது
ஈரோட்டில் ஷேர் ஆட்டோவில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் பொது மக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து திண்டல் வரை செல்லும் ஷேர் ஆட்டோ ஒன்றில் பொதுமக்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
0 coment rios: