சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் வசிக்கும் வீடற்ற ஏழை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா அல்லது அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை வழங்க வேண்டும்.... சேலத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிடத் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ராம்ஜி அவர்கள் அளித்த, அந்த மனுவில், சேலம் வட்டம் அஸ்தம்பட்டி மற்றும் ஜான்சன் நகர் பகுதிகளில் வசித்து வரும் வீழற்ற ஏழை ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தீர்வை ஏற்படாத நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி இலவச வீட்டு மனை பட்டா வழங்க கடிதத்தின் படி தகவலை காணும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், தனி வட்டாட்சியர், தனி வருவாய் அலுவலர் ஆகியோர் வீட்டு மனை பட்டா வழங்கலாம் என தெரிவித்துள்ளார்கள். மேற்படி வட்டாட்சியர் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன்படி அப்பொழுது இருந்த சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அவர்கள் பார்வையிட்டு, விசாரணை செய்து வீட்டு மனை பட்டா வழங்கலாம் என இருவரும் பரிந்துரை செய்து, சேலம் வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்தனர். ஆனால் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், இதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கடந்த 12 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி அலை கழித்து வருகின்றன.
மேலும் கொண்டப்ப நாயக்கன்பட்டி சர்வே எண் தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தை வசதி படைத்த பெருமாள் மகன் வெங்கடாஜலம் என்பவர் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்.
மேலும் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தீர்வை ஏற்படாத தரிசு நிலத்தை நத்தமாக மாற்றி சேலம் வட்டம் அஸ்தம்பட்டி மற்றும் ஜான்சன் நகர் பகுதிகளில் வசித்து வரும் வீழற்ற ஏழை ஆதி திராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க சேலம் வட்டாட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மேலும் வீடற்றவர்கள் கட்டிடத் தொழில் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி பிருந்தா தேவி மனுவை படித்துப் பார்த்த பிறகு இதற்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ராம்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில் மனுவில் குறிப்பிட்டுள்ள அடிப்படை ஏற்ப வீடு ஏழை ஆதிதிராவிடர் மக்களுக்கு இடம் வழங்க வேண்டும் அல்லது தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்களுக்கு என்று தனி இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்ததோடு இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
0 coment rios: