செவ்வாய், 18 ஜூன், 2024

விமானப்படை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு, இணையதளம் வாயிலாக வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் தகுதியுடையவர்கள் ஆவார்.

கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான தொழிற்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஜூலை 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும், தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது 0424-2275860, 94990559431 என்ற எண்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: