S.K. சுரேஷ்பாபு.
மயான தகன மேடை மற்றும் சுற்றுச் சுவர்.... தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி கொடுத்த எம் எல் ஏ,. இரா. அருள்.சேலம் மாநகராட்சி 18 வது கோட்டம் காசக்காரனூர், 23-வது கோட்டத்திற்கு உட்பட்ட திருவாக்கவுண்டனூர் காசகாரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயானம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் பல்வேறு பிரச்சனைக்கு பிறகு வேடிக்கவுண்டர் காலனியில் உள்ள சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தகனமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது பணிகள் முடிவடைந்து இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இதில் அருள் எம். எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பகுதி தலைவர் கணேசன் திருவாகவுண்டனூர் ஊர் கவுண்டர் ராஜா, கணேசன்,காசக்காரனூர் ஊர் கவுண்டர் வேணு குமார்,அதிமுக 23வது கோட்ட செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கர்ணன்,பகுதி துணைத்தலைவர் தேவேந்திரன், அதிமுக முருகன், ராஜேந்திரன், சிவா, செந்தில், பாலு, ரகு, முருகன், வெள்ளி ரவி, செந்தில்குமார், ஜெயகோபால், ராஜா, குமார், வேலுமணி, பத்தாயிரம், கோவிந்தன், ஜெயகணேஷ், சந்திரன், ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: