ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சாமியானா எனப்படும் பந்தல் அமைக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி பந்தல் அமைக்கும் பணியினை முடித்துவிட்டு, கடைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஈரோடு நொச்சுக்காட்டுவலசு பகுதியில் வளைவில், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் மோதியதில், சசிகுமார் தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து, அவர் படுகாயத்துடன் ஈரோடு தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல்துறையினர், சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகுமார் மீது மோதிவிட்டு மர்மமான முறையில் மீண்டும் அதே அசுர வேகத்தில் சென்ற சென்னை பதிவெண் கொண்ட அந்தக் காரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
0 coment rios: