புதன், 3 ஜூலை, 2024

சேலம் அருகே கனரா வங்கி கிளை மேலாளர் மற்றும் புரோக்கர் ஆகியோர் இணைந்து 17 லட்சம் ரூபாய் மோசடி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

கனரா வங்கி - வலசையூர் கிளையில்  வீட்டு அடமான கடன் என்கிற பெயரில் கிளை மேலாளர் & புரோக்கர் இணைந்து  17 லட்சம் பண மோசடி.
சேலம் மாநகரம் சின்ன திருப்பதி கம்பன் தெருவில் வசித்து வரும் திருமதி. தங்கம் மற்றும். ராஜேந்திரன் தம்பதிகள் தங்களது வீட்டின் மேல் அடமான கடன் பெற கடந்த 2019ம் ஆண்டு முயன்று வந்தனர்.
இந்த  சமயத்தில் , சேலம் மாவட்டம்- வலசையூர் பகுதியை சார்ந்த வங்கி ஏஜன்ட் வெ.நாராயணசாமி என்கிற அவர்களது உறவினர் தங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை  அவர்களது வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்து கனரா வங்கி - வலசையூர் கிளை மேலாளர் திரு சக்திவேல் என்பவர் அவருக்கு நெருங்கிய நண்பர் என்றும் வீட்டின் மேல் அடமான கடன் உடனடியாக பெற்று தருவதாக கூறி உள்ளார்.
அதன் அடிப்படையில் தங்கம் மற்றும் ராஜேந்திரன் தம்பதிகள் புரோக்கர் நாராயணசாமி என்பவரை நம்பி கனரா வங்கி - வலசையூர் கிளை மேலாளரை சந்தித்து அனைத்து வீட்டு அடமான கடன் பெறுவதற்கான அசல் ஆவணங்களை வங்கி  கிளை மேலாளர் திரு சக்திவேல் மற்றும் புரோக்கர் நாராயணசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கிளை மேலாளர் சக்திவேல் அறிவுறுத்திய அனைத்து ஆவணங்களிலும் திருமதி தங்கம் பெயரில் வீட்டு அடமான கடன் ஆவணங்களில் கையொப்பம் இடபட்டது.
வீட்டு அடமான கடன் கேட்டு கனரா வங்கி - வலசையூர் கிளையில் அனைத்து ஆவணங்களும் அளித்தும் கடன் குறித்து கனரா வங்கியிலிருந்து பதில் வரவில்லை என்பதால் நேரில் சென்று விசாரித்தபோது தகவல் கேட்ட திருமதி. தங்கம் மற்றும் கணவர் ராஜேந்திரன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது வீட்டு அடமான கடன் என்கிற பெயரில் ஆனத்து ஆவணங்களையும் பெற்ற கனரா வங்கி கிளை மேலாளர் திரு சக்திவேல் மற்றும் புரோக்கர் நாராயணசாமி ஆகியோர் கூட்டாக சதி செய்து தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகளின் வீட்டு அடமான கடன் பத்திரங்களை , ஆவணங்களை தவறாக பயன்படுத்து MSME என்கிற கடன் போலி ஆவணங்களை உருவாக்கி அதற்கான வங்கி கடன் தொகையை புரோக்கர்  நாராயணசாமி பெயரில் இயங்கி வரும்   வருனா டிரேடிங் என்கிற பெயருக்கு வங்கி மேலாளர் திரு சக்திவேல் அவர்கள்  கடனுக்கான காசோலையை கொடுத்துள்ளார்.
இது குறித்து எந்த தகவலும் அப்பாவிகளான திருமதி. தங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு வங்கி மேலாளர் @ கனரா வங்கி - வலசையூர் கிளை நிர்வாகம்  கொடுக்காமல் சுமார் 15 லட்சம் பண மோசடி செய்துள்ளனர்.
திருமதி தங்கம்,- ராஜேந்திரன் பெயரில் வங்கி  கடன்  மோசடி பல லட்சம் நடந்தது குறித்து பாதிக்கபட்ட இவர்கள் சேலம் காவல் துறை ஆணையர் மற்றும் கனரா வங்கி உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை  ஏதும் எடுக்கபடாமல் இருப்பது  ஆச்சரியமளிக்கின்றது.
இதற்கிடையில், கனரா வங்கி நிர்வாகம் கடன் தொகை தவனைகளை கட்ட தவறியதாக திருமதி.தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகளுக்கு வீட்டின் மேல் ஏல நோட்டீஸ் அளித்து உச்சகட்ட தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்ட தங்கம்- ராஜேந்திரன் தம்பதிகள்  கூட்டு நடவடிக்கை குழ ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம்ரவி அவர்களிடம் அளித்த புகார் மனு மீது உடனே சட்டபூர்வ நடவடிக்கை வங்கி மேலாளர் திரு சக்திவேல் மீதும் , புரோக்கர்.நாராயணசாமி மீதும் வழக்கு தொடுக்கபட்டது.
வீட்டு அடமான கடன் என்பதை MSME கடன் என்று மாற்றிய கனரா வங்கி மேலாளர் சக்திவேல் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத்து ஏன் ?
வங்கி கடன் மீது MOD  செய்யும் போது வீட்டின் உரிமையாளரிடம்  கடன் காசோலை கொடுக்காமல் புரோக்கர் நாராயணசாமியிடம் காசோலை அளித்து கூட்டு சதி செய்த  வங்கி மேலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
புரோக்கர் நாராயணசாமி நடத்தி வரும் வருனா டிரேடிங் என்கிற நிறுவனம் உண்மையா ? போலியா ? என்று விசாரிக்காமல் கடன் காசோலையை புரோக்கர் நாராயணசாமி யிடம் கடன் காசோலை கொடுத்த கூட்டு சதியில் ஈடுபட்டு , பண மோசடி செய்த  வங்கி மேலாளர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
போலி நிறுவனம் பெயரில் ( வருனா டிரேடிங் ) வங்கி கோசாலை பெற்று 15 லட்சம் கையாடல் செய்த புரோக்கர்  நாராயணசாமி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
15 லட சம் வங்கி கடன் மோசடி குறித்து கனரா வங்கி நிர்வாகம் கிளை மேலாளர் சக்திவேல் மற்றும் போலி நிறுவன இரசீது கொடுத்து கடன் காசோலை  பெற்ற புரோக்கர்  நாராயணசாமி மீதும் கனரா வங்கி நிர்வாகம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எப்படி ?
பெறாத வங்கி கடனுக்கு 17 லட்சம் கட்ட சொல்லி அப்பாவி  ஏழை குடும்பம் தங்கம்- ராஜேந்திரன்  ஆகியோருக்கு கனரா வங்கி நிர்வாகம் ஏல  நோட்டீஸ் அனுப்பியது எப்படி ?
இந்த ஊழல் , கடன் மோசடி குறித்து காவல் துறை, வங்கி துறை நிர்வாகம்  விசாரணை நடத்தி நீதி கிடைக்கும் வரை  தங்கம்- ராஜேந்திரன் அவர்களின் வீட்டின் மீதான ஏல அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி, இந்த நூதன கடன் மோசடி குறித்து விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியர் , காவல் துறை ஆணையர் மற்றும் கனரா வங்கி உயர் அதிகாரிகளை  வலியுறுத்தி புகார் அளிக்கபட்டுள்ளது என்று கூறியதுடன் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தப்படும் எனவும் சரசுராம் ரவி தெரிவித்துள்ளார்.




শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: