சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆகஸ்ட் 4ஆம் தேதி உலக எலும்பு மூட்டு தினத்தை ஒட்டி அனைத்து தரப்பினரிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி... சேலம் மிட் வேஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் தகவல்..
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் மிட் வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி தலைவர் Dr.மோகனசுந்தரம் மற்றும் செயலாளர் Dr. மயில்வாகனன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே சேலம் மிட் வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி சார்பாக பொதுமக்களின் அடிப்படை உயிர் காக்கும் BLS செயல்பாடுகளின் முக்கியத்துவம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகள், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினால் ஏற்பாடும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் BLS பாடத்திட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம். சேலம் மாநகர காவல் துறையினர், பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு பல்வேறு இடங்களில் இது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
0 coment rios: