சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத திமுக மாமன்ற உறுப்பினரை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம்... 57-வது கோட்ட இளைஞர்கள் மேற்கொண்ட நிகழ்வால் பரபரப்பு...
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. திமுகவைச் சேர்ந்தவர் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் துணை மேயராகவும் இருக்கும் சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் உள்ள பிரச்சனைகளை தீர்த்து தர வலியுறுத்தி அவ்வப்போது மாநகர மக்கள் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினரையும் மாநகராட்சி அலுவலகத்திலும் சென்று புகார் மனு அளித்து அதன் வாயிலாக தீர்வு ஏற்படுத்திக் கொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாநகராட்சியின் 57 வது கோட்டத்திற்கு உட்பட்ட களரம்பட்டி மற்றும் கருங்கல்பட்டி ஆகியவற்றுக்கு உட்பட்ட புலி கார தெரு பகுதியில் சாலை வசதி இல்லாததாலும், குடிநீர் வசதி இல்லாததாலும், சாக்கடை வசதி இல்லாததால் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால் டெங்கு மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாலும், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது தெரு நாய்களின் தொல்லை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பொதுமக்கள் நாள்தோறும் அவதி ஊற்று வருகின்றனர். இது சம்பந்தமாக 57 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரை அணுகி தங்களது பிரச்சினைகளை குறித்து எடுத்துரைத்தாலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவது தங்களுக்கு வேதனை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் கணேஷ் என்பவர் தலைமையில் இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று ஒன்று திரண்டு புலிக்கார தெரு பிரதான சாலையில் பிச்சை எடுக்கும் போராட்டம் மேற்கொண்டு அதன் வாயிலாக கிடைக்கும் தொகை திமுக மாமன்ற உறுப்பினர் கொடுத்து தங்களது பகுதியில் நிலவி வரும் அடிப்படை வசதிகளை செய்தது கொள்ளலாம் என நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
சேலம் மாநகர திமுக உறுப்பினரை கண்டித்து இளைஞர்கள் சிலர் பிச்சை எடுக்கும் போராட்டம் மேற்கொண்டது கருங்கல்பட்டி கடதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிச்சை எடுக்கும் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற வழக்கறிஞர் சங்கர் கணேஷ் நம்மிடைய கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக இந்த 57வது கோட்டத்திற்கு மாமன்ற உறுப்பினராக வந்த அதிமுகவோ திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களோ தங்களின் பிரச்சனைக்கு இதுவரை செவி சாய்க்காமல் எந்த விதமான அடிப்படையை வசதிகளையும் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியத்துடன் இனியும் காலம் தாழ்த்தினால் 57வது கோட்ட பொதுமக்களை ஒன்றிணைத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
0 coment rios: