இதைத்தொடர்ந்து வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு கருங்கல் பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 36) என்பதும், அவர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, ஆர்.என்.புதூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்த னர். மேலும் அவரிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டில் ஆம்னி காரில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலை மையிலான போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது 15 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
0 coment rios: