குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு 3 குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றியது, நேற்று முதல் அந்த சட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன. இதை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்க்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
எனவே வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஈரோடு பார் அசோசியேஷன் சார்பில், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பு திரண்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில், செயலாளர் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், பிரகாஷ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று மதிய அரசு நிறைவேற்றி உள்ள முப்பெரும் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
0 coment rios: