இதைக் கண்ட டிரைவர் கார்த்திக் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். உடனடியாக பேருந்தில் சென்ற 15 பயணிகளும் உடைமைகளுடன் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டனர். பயணிகள் அடுத்தடுத்து பேருந்தில் இருந்து வெளியேறும்போது பேருந்துக்குள் கரும்புகை சூழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பஸ்ஸில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் பேருந்தின் பெரும்பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து சித்தோடு காவல்துரைய்ஹினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆம்னி பஸ் தீப்பிடித்து இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: