சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் பணியாணை மற்றும் பணி மாறுதல். சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனரிடம் விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில் முடிவு..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கிளை அலுவலகங்கள் அஸ்தம்பட்டி, ஜான்சன் பேட்டை, எருமபாளையம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற அலுவலகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சனைகளும், இன்னல்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இதுபோன்று பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கிய நபர்களில் சிலர், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சரஸ்ராம் ரவி அவர்களை சந்தித்து தங்களது பிரச்சனைகளை குறித்து வலியுறுத்தியுள்ளனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்ற சரஸ்ராம் ரவி அவர்கள் அரசுப் போக்குவரத்து கழக - சேலம் மண்டல மேலாண்மை இயக்குநர் அவர்களை நேரில் சந்தித்து பல கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நீண்ட கால 9 ஆண்டு ஊழியர் பணி நீக்கம் ,( ஜம்பு@ தமிழ்நிலவு - DR- 2702 ) குறித்து உயர்நீதி மன்றம் உத்தரவு அடிப்படையில் மீண்டும் மாற்று பணி வழங்கிட முடிவாகியதுடன், அருள்பிரசாத் DR No 9679- ( எருமாபாளையம் கிளை ) இட மாறுதல் மேட்டூர் கிளை செய்ய உறுதி செய்யபட்டது. மேலும் வடிவேல் DR No 4445 பணி மாறுதல் ( பேருந்து ) உறுதி செய்யபட்டது.
பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் பிரச்சனையை ஏற்று முழு ஒத்துழைப்பு நல்கிய மேலாண்மை இயக்குர், சேலம் மண்டலம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை சரஸ்ராம் ரவி அவர்களும் பணி பலன்கள் பெற்ற தொழிலாளர்களும் தெரிவித்து கொண்டனர்.
0 coment rios: