செவ்வாய், 2 ஜூலை, 2024

நான் கடவுள்: அந்தியூர் அருகே பெருமாள் சிலை மீது அமர்ந்து அபிஷேகம்

உலகம் முழுவதும் எல்லா மதங்களிலும் மத கடவுள்கள் பெயரில் வழிபாடு செய்பவர்களின் ஆதிக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தான் பெரியார் மூட நம்பிக்கை என்றார். இதுபோன்ற மூட நம்பிக்கைகள் இந்து மதத்தில் அதிக அளவில் இருப்பதால் தான் பெரியார் அதனை சுட்டிக்காட்டியதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் நான் தான் கடவுள் என கூறிக்கொள்பவர்கள் இன்னும் பல இடங்களிலும் மக்களை ஏமாற்றி தான் வருகிறார்கள்.

இது போன்ற ஒரு சம்பவம் ஈரோடு பகுதியில் நடந்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோசலராமன். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கலியுக ரங்கநாதர் என்ற பெயரில் கோயில் கட்டி பூஜை செய்து வருகிறார்.

இந்த நிலையில், அமாவாசை தோறும் நடைபெறும் பூஜையில் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொண்டு பெருமாள் சிலையின் மீது ஏறி அமர்ந்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு கோயில் அர்ச்சகர் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், சமூக வலைதளங்களில் இதற்கு பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: