செவ்வாய், 23 ஜூலை, 2024

ஒரு ஆண்டிற்கும் மேலாக பூட்டி கிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம்... பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... முதல்வர் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தமிழ்நாடு ட பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஓராண்டிற்கும் மேலாக பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம். அடிப்படை தேவைகளுக்காக கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவரை அணுகும் போது உதாசினம்... பொதுமக்களின் மன உளைச்சலை தவிர்க்க பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்......


சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியத்தில் இன்று
டி, பெருமாபாளையம் பஞ்சாயத்தில் நான் முதல்வர் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் அயோத்தியபட்டினம் ஒன்றிய குழு தலைவர் அவர்கள், வட்டார வளர்ச்சி ஆணையர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், போன்ற ஒன்றிய நிர்வாகங்கள் கலந்து கொண்டனர். 
இந்த முகாமில், பள்ளிப்பட்டி, தைலானூர், தாதனூர்,
டி,பெருமாபாளையம்,  கோராத்தப்பட்டி, போன்ற  பல்வேறு கிராமங்கள் உள்ளடக்கி பகுதிகளுக்கு நான் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்கள் குறை தீர்க்கும்  முகாம் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் முகாமில், தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ராம்ஜி கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினார். 
அந்த மனுவில், சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியம் பள்ளிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் சுமார் 2023 முதல் இன்று 23/07/ 24 இன்று  வரை அலுவலகம் பூட்டி கிடபாதால் பள்ளிப்பட்டி கிராமத்தில் வாழும் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு சென்று குறைகளை தெரிவித்து வருகின்றனர். அப்படி வீடு தேடி செல்லும் மக்களை பஞ்சாயத்து தலைவர் அவர்கள் குறைகளை  கவனமாக கேட்காமல்  உதாசனும் செய்து வருகிறார். இதனால் அப் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பல்வேறு அடிப்படைத் தேவைகள் இன்றி பள்ளிப்பட்டி ஆதிதிராவிடர் பகுதியில் சாக்கடை கால்வாய், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்காக அலுவலகத்தில் மனு அளிக்க காத்திருந்தாலும் தலைவரோ அதிகாரிகளோ வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் வெகு சிரமத்துக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசி வருவதால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றன, மின்விளக்கு பராமரிப்பு இன்றி இருண்ட நிலையில் நடைபாதை உள்ளது. அண்மையில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல லட்சக்கணக்கான ரூபாய்  மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் சி, சி. ரோடு அனைத்தும் தரமற்ற முறையில் போடப்பட்டதால் அவைகள் ஓரிரு வாரங்களிலே  அனைத்தும் பெரிதும் சிதலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் குண்டும் குழியுமாக ஜல்லி மேல் மக்கள் காலில் பல காயங்கள் ஏற்பட்டு பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாத சூழல்யும்  ஏற்படுகிறது, எனவே 
பூட்டி  கிடக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அடிப்படை வசதிகளை சரி செய்து கொடுக்க  முன்வராத பஞ்சாயத்து தலைவர் மீதும் நிர்வாகத்தின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அயோத்தியபட்டினம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது, மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை ஒன்றிய நிர்வாகம் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 365 நாட்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் பஞ்சாயத்து அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியில் சம்மந்தப்பட்ட பகுதி கிராமப் மக்கள் உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: