இந்நிலையில், யானையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் டி.என்.பாளையம் வனச்சரகர் மாரிமுத்து தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானை இருக்குமிடத்தை சுற்றி பாதுகாப்பினை ஏற்படுத்தினர். பின்னர், அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வரும் நிலையில், தொடர்ந்து, யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கேள்விபட்டதும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் யானையை விரட்டும் பணி குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் யானை குமரகிரி முருகன் கோவில் மலை பகுதியில் இருந்து கீழே இறங்கி ஈரோடு-சத்தி சாலையை கடந்து வயல் வழியாக டி.என்.பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமார் 4.30 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
0 coment rios: