இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விழா முடிவதற்கு முன்னரே வெளியே வந்தார். அப்போது, அவர் ஸ்பா நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு அருகாமையில் நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, தலைக்காயம் ஏற்படுகிறது.
ஆகையால் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் இந்த கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகிறது. இருதய சிகிச்சை அளிப்பதற்கும் இம்மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தையும், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் கோரிக்கையாக அளித்துள்ளேன். நரம்பியல் மற்றும் இருதயம் ஆகிய இரு துறைகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் கலந்து பேசி, விரைவில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியாக கூறியுள்ளார்.
நான் இந்த மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து செல்லவில்லை. அமைச்சரிடம் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, எனது சொந்த வேலையின் காரணமாக செல்கிறேன் என அமைச்சரிடம் கூறிவிட்டு தான் செல்கிறேன். சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது எந்த அரசாக இருந்தாலும் அவ்வப்போது ஏற்படும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது ஆளுக்கின்ற அரசினால் வருவது இல்லை. சட்டம் ஒழுங்கு என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மையமாக வைத்து பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக அதிகாரிகளை கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ஒரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். ஆகவே தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எனது கருத்து. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: