சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் விங் ரோட்டரி சங்கம், அன்பின் கரங்கள் அறக்கட்டளை மற்றும் ஜென் னிஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மெகா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சேலம் விங் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திருமதி.கரோலின் மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றவர்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
மேலும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து கொண்டு சிறந்த சமூக சேவையாற்றி வந்த நபர்களுக்கு விழாவில் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டத்தோடு மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்பட்டன. ஏழை எளிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை இழந்தவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
இது தவிர மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வை இழந்த நபர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன. இது போக இன்னும் ஏராளமான உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட இந்த மெகா நிகழ்ச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.
மெகா நல உதவிகள் வழங்கிய அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளான சசிகுமார், விஜய் ஆனந்த், அர்ச்சனா மணிகண்டன், ஹேமலதா, சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரமௌலி, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர், சிறந்த மாற்றுத்திறனாளி சமூக சேவகர் அத்தி அண்ணன், மற்றும் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 coment rios: