மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா ஈரோடு திருநகர் காலணியில் உள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ப.மீரான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ப.சலீம் முன்னிலை வகித்தார். ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் அ.சித்திக் விழாவை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் க.முஹம்மத் உமர் கலந்து கொண்டார். விழாவில், பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர் பாட்டில், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில், தமுமுக மாவட்ட செயலாளர் எஸ்.முஹம்மது லரீப், எம்விஎஸ் மாநிலத் துணைச் செயலாளர் இலியாஸ், மமக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சிக்கந்தர், தமுமுக கிளை செயலாளர் ரியாஸ் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் திருநகர் காலனி கிளை தலைவர் கே.எஸ்.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
0 coment rios: