சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய சுதந்திரத்தின் முதல் போராட்ட வீரன் தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினம். சேலம் மேற்கு மாவட்ட த.மா.க தலைவர் சுசீந்திரகுமார் மாலை அணிவித்து மரியாதை...
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை. இவர் இந்திய சுதந்திர போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஆங்கிலேயர்கள் தமிழக வசூலித்த வரிப்பணத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையே சின்னமலை பறித்துக் கொண்டான் என்று ஆங்கிலேயரிடம் கூறுங்கள் என்று கொக்கரித்தவர் தான் தீரன் சின்னமலை கவுண்டர்.
அவ்வாறு அபகரித்த வசூல் பணத்தை மீண்டும் மக்களுக்கே திருப்பி கொடுத்தார். இவரின் 219 - வது நினைவு தினம் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3 - ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் குரங்கு சாவடி பகுதியில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. த.மா.க சேலம் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகி தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் த.மா.க மாநில நிர்வாகி ரகு நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஐயா தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.
0 coment rios: