இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், நசியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நடைபெறும் விழாவில், நசியனூர் புதிய கிளை அலுவலகம் மற்றும் இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு குன்றி என்ற இடத்தில் புதிய கிளை அலுவலகம், ரூ.25.96 லட்சம் மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட மலையப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அலுவலகம், ரூ.66 லட்சம் மதிப்பில் அயலூர், மாணிக்கம்பாளையம் மற்றும் சத்தி கொமரபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா 100 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 3 சேமிப்பு கிடங்குகள், சத்தியமங்கலம் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.8.74 லட்சம் மதிப்பில் சிறுவனப் பொருட்கள் உலர்களம், தூக்கநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.23.24 லட்சம் மதிப்பில் வேளாண் விற்பனையகம், குடுமியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் குடுமியாம்பாளையம் கடையில் இருந்து ஓம்சக்தி நகர் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை, தானத்தம்பாளையம் புதிய நியாய விலைக்கடை, காடையம்பட்டி நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் என கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு மொத்தம் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 28 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், 12 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நகைக் கடன், 24 பயனாளிகளுக்கு ரூ.11.90 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவி குழுக் கடன், 2 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் நடைமுறை மூலதனக் கடன், 22 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வைப்பு நிதி, 70 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் என மொத்தம் 158 பயனாளிகளுக்கு ரூ.2.24 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர் காளிதாபானு உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: