சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேசிய சீட்டு நிதிநாள் நிதி நாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் சேலம் மாவட்ட சிட் மற்றும் பைனான்ஸ் நிதி நிறுவன அசோசியேஷன் சார்பில் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தேசிய சீட்டு நிதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய சீட்டு நிதினாள் அன்று சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் அசோசியேஷன் சார்பில் அன்னதானம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட சீட்டு மற்றும் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பில் சேலம் அரசு பொது மருத்துவமனை அருகே புற நோயாளிகள் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அந்த சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ரவிசங்கர் ராஜேந்திரன் செல்வம் மற்றும் சட்ட ஆலோசகர் மோகனசுந்தரம் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்த நிதி நாள் கொண்டாட்டம் குறித்து அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆண்டுதோறும் தேசிய சீட்டு நிதி நாளன்று தங்களது அசோசியேஷன் சார்பில் ஏழை எளியவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்து வருவதாக தெரிவித்த அவர், அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் தங்களது முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பலன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் கார்த்தி ஹரிஷ் சேகர் முரளி செந்தில் வேல் உட்பட நிதி நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: