சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்டம்- வன துறையில் எழந்துள்ள சாதிய வன் கொடுமைகளை தடுக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகத்தை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ( Principal Chief Conservator of Forest - Cjennai ,) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.*....... *தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்.
தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
சேலம் வன துறையில் பணியாற்றும் SC/ ST ஊழியர்களுக்கு பதுகாப்பு இல்லை. குறிப்பாக பட்டியலின பெண் ஊழியர்களுக்கு கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏற்புடையதல்ல. இங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் திருமதி. விழியரசி என்கிற பட்டியலின பெண் ஊழியருக்கு இங்கு பணியாற்றி வரும் மீனா ( Forester) மற்றும் இதர சாதி இந்து காவலர்கள் , அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக மிகுந்த தொல்லை கொடுத்தும், சாதிய வன்கொடுமையும் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இந்த பெண் ஊழியர் வன்கொடுமை குறித்து மேல் நிலை அதிகாரிகள் அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியபட வைக்கின்றது. பணி புரியும் இடத்தில் பெண் ஊரியர்களுக்கு பாதிப்பு, வன்கொடுமை, தொல்லை கொடுப்பது சட்டபடி குற்றம். மாநில பெண்கள் ஆணையம் விசாரணைக்கு உட்பட்டது.இதைவிட பெரிய கொடுமை.
0 coment rios: