சேலம்.
S.K சுரேஷ் பாபு.
செப்டம்பர்-17, வன்னிய சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிப்பு. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பங்கேற்பு.
வன்னியர் சமுதாய இட ஒதுக்கீட்டு போராளிகள் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அனைத்து நிர்வாகிகளும் தங்களது இளங்கல் முன்பு வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் என்ற பதாகைகள் வைத்து குடும்பத்தினருடன் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று தியாகிகள் தினத்தை ஒட்டி சேலம் மாநகர பாமக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா.அருள் தனது இல்ல முன்பாக வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் என்ற பதாகையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தலைமையில் சேலம் நான்கு ரோடு, பெரிய புதூர், சாமிநாதபுரம், சூரமங்கலம் உழவர் சந்தை அருகே, குரங்கு சாவடி, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பாமக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், பசுமைத்தாயக இணை செயலாளர் சத்திரிய சேகர், அருள் பூமாலை மாணிக்கம் கோவிந்தராஜ் திரிசங்கு நடராஜ் மோகன் குமார் வேலாயுதம் வைரவேல் மதி முனியப்பன் கேபிள் மாணிக்கம் பூபதி விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: