அப்போது, ராமசாமிக்கு பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் ஏடிஎம் கார்டையும், ரகசிய எண்ணையும் கூறி ரூ.1,500 பணம் எடுத்து தர சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் ஏடிஎம் கார்டினை வாங்கி, வங்கியில் இருப்பு உள்ள பணத்தை அறிந்து தெரிந்து கொண்டு, ராமசாமிக்கு ரூ.1,500ஐ எடுத்து கொடுத்தார்.
பின்னர், ராமசாமியின் ஏடிஎம் கார்டுக்கு பதில் அவரது ஏடிஎம் கார்டினை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து, அந்த நபர், ராமசாமியின் ஏடிஎம் கார்டினை பயன்படுத்தி ரூ.30 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, ராமசாமி ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதன்பேரில், ஏடிஎம் மையத்தில் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டினை மாற்றி கொடுத்து பணம் திருடியது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குப்பண்டாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்குமார் (வயது 36) என்பதும், அவர் தற்போது ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே அண்ணா நகரில் வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, செந்தில்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
0 coment rios: