ஈரோட்டில் 3 மாத குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரிபாஸ்கர் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இந்த தம்பதிக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவரது மனைவி லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிற புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார். இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்து இருப்பதை பார்த்துள்ளார்.
இந்நிலையில், தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். பின்னர், நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் செய்வதற்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.
இதனை ஆய்வு செய்த நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர், 3 ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள்,காய்கறிகள்,எண்,வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றான்.
இக்குழந்தை உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்த நிலையில் குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் குழு வழங்கியுள்ளது. இந்நிலையில் உலக சாதனை படைத்த குழந்தையாக மாறியுள்ளார் 3 மாத குழந்தையான ஆதிரன்.
0 coment rios: