சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள். அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் இன்று தொடங்கியது. சேலம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வரும் இருபதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியின் துவக்க விழா சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் மற்றும் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து கூடைப்பந்து மேசைப்பந்து செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் தடகள போட்டிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திலும்,
சேலம் ஒய் எம் சி ஏ அரங்கில் கேரம் விளையாட்டுப் போட்டியும் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் மொத்தமாக கேரம் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 457 மாணவர்களும் இரட்டையர் பிரிவில் 111 மாணவர்களின் மொத்தம் 768 பேர்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக ஒற்றைய பிரிவில் 84 மாணவர்களும் 2000 பிரிவில் 39 மாணவர்களும் என சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். அகில இந்திய கேரம் கழக துணைத் தலைவரும், தமிழ்நாடு கேரம் கழக தலைவருமான ஆமாம் துவக்க வைத்த இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி கேரம் போட்டிகளின் விதிமுறைகளை பின்பற்றி விளையாடியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்ச்சியில் ஒய் எம் சி ஏ அரங்கத்தின் ஜோஷ், சேலம் மாவட்ட கேரம் கழக செயலாளர் டானியல், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உட்பட உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஹாக்கி போட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளியிலும் இறகுப்பந்து போட்டி சேலம் மாநகராட்சி கிளப் கோட்டையிலும், கைப்பந்து ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கால்பந்து போட்டியில் சென் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் போட்டி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்கான முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
0 coment rios: