சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
முதலமைச்சர் கோப்பை காண கூடை பந்து போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை.
தமிழக முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் கடந்த பத்தாம் தேதி முதல் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. வரும் இருபதாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கோப்பை காண போட்டிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியும் இவர்களை எதிர்த்து சேலம் எமரால்டு வேலி சிபிஎஸ்இ பள்ளி அணிகளும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணியினர் 74 க்கு 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் வெற்றி வாகை சூடினர்.
வெற்றி பெற்ற அடியினரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்திரு. செபஸ்டியன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட், பயிற்சியாளர் சகாதேவன் இவர்களைத் தவிர பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் கூடைப்பந்து அணிக்காக பங்கேற்று வெற்றி வாகை சூடிய மாணாக்கர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: