சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தின் அடையாளமாக விளங்கும் பௌத்த மதத்தின் புத்தர் சிலையையும் அவரது கோவிலும் மீட்டெடுப்போம். சேலத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் உறுதி.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் ஜோ.அருண் அவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செயலர் சம்பத், துணைத் தலைவர் குத்தூஸ், உறுப்பினர்கள் வசந்த், ஹாமில்டன், நெல்சன், ஸ்வர்ண ராஜ், ராஜேந்திர பிரசாத், பிரவீன் குமார், நஜிமுதீன், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆனால் தற்பொழுது வரை தொல்லியல் துறை சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி குற்றச்சாட்டாகவே உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து இதுவரை ஆறு மாவட்ட ஆட்சியர்கள் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோக 3 சிறுபான்மையினர் நல ஆணையர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் சேலத்தில் உள்ள பௌத்த மதத்தினர் யாரை அணுகினால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார். இதற்கு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் கூறுகையில், ஏற்கனவே பௌத்த மதத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் இது புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு வழக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்ட கோவிலில் ஆய்வு மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டுவதுடன் சர்வே மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை ஒன்றிணைத்து அதில் எப்படி வெற்றி பெறுவது என்று ஆராய்ந்து பௌத்த மதத்திற்கு அடையாளமாக உள்ள புத்தர் மற்றும் அந்த கோயிலை மீட்டெடுப்போம் என்று உறுதியளித்தார்.
0 coment rios: