சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் கொண்டலாம்பட்டி திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் பகுதியில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டி அமைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகள் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் சிலர், கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனுவில் திருமணிமுத்தார் ராஜவாய்க்கால் அம்மணி கொண்டலாம்பட்டி வாய்க்கால் கரை பகுதியில் கரை ஓரங்களில் கொண்டலாம்பட்டி , மாநகராட்சிஜாரி கொண்டலாம்பட்டி 50வது டிவிஷன், கல்லங்காடு, தானம் கரடு, சின்ன கொண்டலாம்பட்டி, என பத்தாயிரம் குடும்பங்களுக்கு மேல் வாய்க்கால் கரை ஓரங்களில் மயானமாக பயன்படுத்தி வருகிறார்கள் இந்த இடத்தை விட்டால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேறு இடம் மயானத்திற்கு கிடையாது இந்த நிலையில்இந்த பகுதியில் சேலம் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி கட்டுவதாக அறிவிப்பு வந்தது இது சம்பந்தமாக 13 .0 5 .2024 யில் இந்த இடம் இந்த பகுதியில் உள்ள பத்தாயிரம் குடும்பத்தில் மேல் உள்ளவர்களுக்கு மயானமாக உள்ளதால் இங்கு கழிவுநீர் தொட்டி கட்டினால் பாதிக்கப்படும் மற்றும் இந்த இடம் திருமணிமுத்தாறு சொந்தமான இடம் நீர்வழிப் பாதையில் எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது ஆகையால் மாற்று இடத்திற்கு கழிவு நீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கையும், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேர்முக உதவியாளர் அவர்களிடம் கோரிக்கையும், அந்த தேதியில் தேர்தல் விதிமுறை இருந்ததால் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் புகார் மனு போடப்பட்டது.
அதற்கு பிறகு நான்கு மாதங்களாக எந்த ஒரு அறிவிப்பு அறிவிக்கப்படவில்லை நேற்று மீண்டும் கழிவு நீர் தொட்டி கட்டுவதாக சேலம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த ஊர்களில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தெரிவிக்கப்பட்ட அதிகாரியிடம் இந்த இடம் எங்களுக்கு மயானமாக காலகாலமாக பயன்படுத்திக் கொண்டுள்ளோம் இங்கு கழிவுநீர்தொட்டி கட்டினால் எங்களுக்கு மயானம் இல்லாமல் போய்விடும் அதனால் கைவிட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது கோரிக்கையை ஏற்ற வந்த அதிகாரி நீங்கள் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை மீண்டும் ஒரு முறை நீங்கள் மாநகராட்சி நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கை கொடுங்கள் நான் கைவிட்டு விடுகிறோம் நேற்று தெரிவித்தனர் அதன்படி இன்று தமிழக முதலமைச்சர் ,மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர் , அவர்கள் அலுவலகத்திலும் சேலம் மேயர்அவர்களிடம் சந்தித்து அவர்கள் அலுவலகத்தில் கோரிக்கை மனு பத்தாயிரம் குடும்பங்கள் சார்பில் கழிவு நீர் தொட்டி மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரி ,குளம், குட்டைகள் தூர்வாரி மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாண்புமிக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது உடன் சேலம் மாவட்டத் தலைவர் தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
0 coment rios: