ஈரோடு அருகே அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தனியார் பேருந்து டிரைவர் செய்யும் அட்டூழியம்
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 9 : 35 மணியளவில், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது, இந்த அரசு பேருந்திற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து காலை 9 : 41ற்கு இயக்க வேண்டும் என பர்மிட் உள்ளது.
ஆனால், தனியார் பேருந்திற்கு கொடுக்கப்பட்ட பர்மிட் நேரத்திற்கு முன்பாக அதாவது காலை 9 : 35க்கு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்து இயக்கப்படும் நேரத்தில், அரசு பேருந்தை முந்தும் வகையில் இயக்கப்பட்டது.
பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பயணமானது, சேலம் செல்லும் வரை நீடித்தது, தொடர்ந்து அரசு பேருந்து வெப்படை பேருந்து நிறுத்தம் அருகே வந்து பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்னால் அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து வெப்படை பேருந்து நிலையத்தை கடந்து சென்றதுடன், அரசு பேருந்து ஓட்டுனரின் வேகத்தை குறைக்கும் வகையில், அரசு பேருந்திற்கு வழி விடாமல், வழியை மறித்து தனியார் பேருந்தை ஓட்டுனர் தொடர்ந்து இயக்கி வந்ததால், தனியார் பேருந்தில் பயணித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியவாறும், அரசு பேருந்து ஓட்டுநருக்கு இடையூறு செய்தும் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியவாறும் தனியார் பேருந்தை ( ஏ.எம்.வி.ஜே கார்த்திகேயன் டிரான்ஸ்போர்ட் ) இயக்கியதால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்தும், தனியார் பேருந்து பர்மீட்டை ரத்து செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
தொடர்ந்து இதுபோல், பேருந்து பயணிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி, அரசு பேருந்துகளுக்கு பிரச்சினையாக இருக்கும் தனியார் பேருந்துகள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மன உளைச்சல் இல்லாமலும், இரு தரப்பு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் நிம்மதியாகவும் பயணிக்க முடியும் என்பதே நிதர்சனம்.
0 coment rios: