ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி அருகே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில் சிறப்பு கூட்டம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராாக இருந்தபோது கொண்டு வந்து நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 4 மாவட்ட மக்கள் பயனடையக்கூடிய பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், காவிரி மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

பாசூரில் அமைந்துள்ள ரெயில்வே கேட்டால் பாசூர் கதவணை வழியை மட்டும் அல்லாது அந்த வழித்தடத்தில் அமைந்துள்ள மின்ம யானம் மற்றும் அந்த வழித்தடத்தை பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாசூர் ரெயில்வே கேட் அருகே உயர்மட்ட பாலம் அமைத்து போக்குவ ரத்தை எளிதாக்க வேண்டும். மொடக்குறிச்சி வழியாக வெள்ளகோயில் வரையில் 4 வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பு மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துத்துள்ளார். 

இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது மொடக்குறிச்சியில் தமிழக அரசு பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்டங்கள், ஒன்றியங்கள், நகரங்கள், ஊராட்சிகள், உள்ள கிளைகளை அதிகப்படுத்தி பொறுப்பாளர்களை , நியமிக்க என்பது வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளான பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: