சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக வெற்றி கழகம் எதிர்காலத்தில் மிகப்பெரிய நல்லாட்சியாக தமிழக மக்களுக்கு திகழும். சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழில் பார்த்திபன் சூளுரை.
தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தும் மாநாடு நடத்துவதற்கான அனுமதியை விழுப்புரம் காவல்துறையினர் வழங்கி நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி வணிகவளாகம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொண்டாட்டத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கட்சியின் பெயரையும் கட்சிக் கொடியையும் அறிவித்த பிறகு, கட்சியின் பொதுச் செயலாளர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தங்களது கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று விண்ணப்பத்தி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் கூறியதை தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக சேலத்தில் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் இந்த 2024 ஆம் ஆண்டு தங்களுக்கு முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறோம் என்றும் காரணம் தலைவர் கட்சியை அறிவித்தது, கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது விழுப்புரத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியது என முப்பெரும் விழாவாக கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் தங்களது கட்சி தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நல்லாட்சியாக அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய தமிழன் பார்த்திபன் இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளார் என்றும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
0 coment rios: