ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறை சாலையில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மொடக்குறிச்சி போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, 204 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சைல் தேசில் லம்பா பிடாணி என்ற ஊரைச் சேர்ந்த தேவாரம் என்பவரது மகன் பட்டேல் என்ற கேசராம் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 8 மாதமாக டீக்கடை நடத்தி வரும் இவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, வீட்டில் இருந்த 204 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
0 coment rios: