S.K. சுரேஷ் பாபு.
சேலம் மேற்கு தொகுதியில் 21 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் திறந்து வைத்தார்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி,
அழகுசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெண்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்று வகையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறந்து வைத்து அப்பகுதியில் உள்ள பெண்களிடம் சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டு சாவியை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கே.சி ஆறுமுகம், அமைப்புச் தலைவர் சரவணன், கருங்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், ஒன்றிய தலைவர் அருள்மணி,ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி மணி, து தலைவர் கோபால், சின்னதம்பி, பொன். ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் சேட்டு, பிரகாஷ், குமார் நாகராஜ், சுரேஷ், கார்த்தி மற்றும் அப்பகுதியில் உள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
...
0 coment rios: