சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே 53 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டு. மாணவ மாணவியர் குழுவினருடன் புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்.
தமிழகத்தில் நெடுந்தூரம் சென்று கல்வி பயிலும் மாணவ மாணவியரின் நலன் கருதி, தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் 12 ஆம் வகுப்பு பெயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மானாக்கர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலத்தை அடுத்துள்ள நாழிகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 53 மாணாக்கர்களுக்கு விலை வண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 21 மாணவர்கள் மற்றும் 32 மாணவிகள் என மொத்தம் 53 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து மாணாக்கர்கள் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பாரப்பட்டி சுரேஷ் குமார்.
இந்த விழாவில் ஏஹெச்எம் உதவி தலைமை ஆசிரியர் திருமதி சித்ராதேவி, மூத்த ஆசிரியர் கணையம் உட்பட ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: