சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
துப்புரவு பணியாளர்கள் உட்பட 90 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் தீபாவளி புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. ஆண்டுதோறும் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களின் போது சேலம் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தனது சொந்த செலவில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 10-வது கோட்டத்தில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் புத்தாடைகள் உள்ளிட்ட அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் இன்று எனது கோட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், DBC பணியாளர்கள், பிளம்பர், பிட்டர், டிரைவர்கள், சூப்பர்வைசர்கள், என மொத்தம் 90 நபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் தனது சொந்த செலவில், அனைவருக்கும் திபாவளி பண்டிகைக்கான புத்தாடைகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள் திருக்கரங்களில் கொடுத்து மகிழ்ந்த தெய்வலிங்கம் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உடன் கோட்ட கழக செயலாளர்கள் லோகு. சௌந்தர் கவுன்சிலர் திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: