சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தில் இணைப்பு பாலம் கட்டித் தரவில்லை எனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவேன். NHAI திட்ட இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள்.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி புது டெல்லியில் உள்ள மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பணிகள் ஒதுக்கீடு செய்து தற்பொழுது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சேலம் ஒன்றாவது கோட்டத்திற்கு உட்பட்ட மாமாங்கம் அண்ணா நகர் 1,2, மற்றும் 3, தில்லை நகர், அமராவதி நகர், மோட்டூர், சின்ன மோட்டூர் மற்றும் ஊத்துக்கிணறு ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசின் கீழ் இயங்கும் செயல் ரிப்ராக்டரி காலணியும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் பாதம் திருக்கோவிலும் உள்ளது. பெரிய மாரியம்மன் திருக்கோவில் மற்றும் புகழ் பெற்ற தேவாலயம் உள்ளது. அங்கு தனியார் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட கல்லூரியில் 1200 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அழகாபுரம் திரௌபதி அம்மன் திருக்கோவில் பண்டிகையின் போது, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 100 கிணறு பகுதியில் புனித நீராடி விட்டு அதன் பிறகு தான் தீமிதி திருவிழாவில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
எனவே இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், மாணவ மாணவிகள், பக்தர்கள் மற்றும் வர்த்தக வணிக நிறுவனத்தினர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு மாமாங்கம் ஊத்துக்கிணறு அருகே VUP, பர்ன் & கோ கிராசிங் இடையே சிறய இணைப்பு பாலம் அமைத்திட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசலு அவர்களை நேரில் சந்தித்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை மனு வழங்கியதுடன், தயவு செய்து விரைந்து புதிய இணைப்பு பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் அமைக்காத பட்சத்தில், அங்குள்ள பொதுமக்களை திரட்டி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தெரிவித்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையை ஏற்று விரைந்து இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் திட்ட இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.
அப்போது நிர்வாகிகள் மோகன், பழனியப்பன் இளவரசன், ராமபாதம் அறக்கட்டளையின் தலைவர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
0 coment rios: