சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
OCT-2, காந்தி பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா ஒரு வார காலம் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நாள் தோறும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்று வந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை விமர்சனம் செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ராஜாஜி திருவுருவ சிலை அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மற்றும் அமைதி பேரணிக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் மௌன ஊர்வலம் ஆனது செவ்வாய்பேட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக செவ்வாய்பேட்டை தேர்வு நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திரு உருவ சிலை அருகே நிறைவு பெற்றது. இதனை எடுத்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலரும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்த அமைதி பேரணியை நிறைவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர் கிரிஜா குமரேசன், மாநகர துணை தலைவர் திருமுருகன் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் எஸ்சி துரை விஜய் ஆனந்த் மாநகர பொது செயலாளர் கோபி குமரன் குமரேசன் மொட்டையாண்டி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சைப்பட்டி பழனி வசந்தம் சரவணன் விவசாயப் பிரிவு தலைவர் சிவக்குமார் மண்டலத் தலைவர்கள் சாந்தமூர்த்தி நிஷார் அஹமது கோவிந்தராஜ் ராமன் நாகராஜ் நடராஜ் கந்தசாமி மோகன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
0 coment rios: