இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அங்கிருந்து சின்னத்தாயை மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றனர்.
ஆம்புலன்சை சதீஸ்குமார் என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் அங்கமுத்து இருந்தார். ஆம்புலன்ஸ், பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரை பகுதியை கடந்து சென்றபோது சின்னதாய்க்கு பிரசவ வலி அதிகமாகி உள்ளது.
அப்போது, அவசர கால மருத்துவ நுட்புணர் அங்கமுத்து, ஆம்புலன்சிலேயே சின்னதாய்க்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில், காலை 9.09 மணிக்கு சின்னதாய்க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், குழந்தையையும் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
108 ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றிய அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் டிரைவருக்கு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் பாராட்டு தெரிவித்தார்.
0 coment rios: