ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆர்கேவி சாலையில் 10க்கு மேற்பட்ட பிரபலமான பெரிய ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளி கடைகளில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை மறுநாள் குறைந்த விலைக்கு ஜவுளிகள் விற்பனை செய்வது வழக்கம்.
இந்தாண்டிற்கான தீபாவளி விற்பனை நேற்று (அக்டோபர் 31) வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று (நவம்பர் 1) அதிகாலை முதல் ஜவுளி கடைகள் தங்களது கடைகளில் உள்ள ஜவுளி ரகங்களை குறைந்த விலைக்கு ஜவுளிகளை விற்பனைக்கு வைத்தனர்.
இதனை வாங்க ஈரோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜவுளிகளை வாங்க குவிந்தனர். இதில் குழந்தைகளுக்கான ஆடைகள் 50 ரூபாய் முதலும், பெரியவர்களுக்கு ஆடைகள் 200 ரூபாய் என குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் கடைகளில் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு துணிகளை வாங்க மக்கள் அலைமோதியதால், ஜவுளிக்கடைகள் ஸ்தம்பித்தது. தீபாவளி பண்டிகை முந்தைய நாள் விற்பனை போன்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட போல, கடை வீதிகளில் மக்கள் அதிகரித்து காணப்பட்டது.
ஜவுளி கடைகள் குறைந்த விலைக்கு ஜவுளிகளை விற்பனை செய்ததால் தீபாவளி பண்டிகை முடிந்தும் கூட, துணிகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலையில் ஆர்வம் காட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
0 coment rios: