S.K. சுரேஷ்பாபு.
இட ஒதுக்கீடு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறிவுச்சங்கம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் சார்ப் முரளி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் சமூக அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்படுவதை பட்டியல் சமூகங்களின் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் பட்டியல் சமூக முன்னேற்றம் உரிமை எனும் நோக்கில் இது மிக முக்கியமான போராட்டம் என்றும் அரசின் ஊழியர்களானாலும் பட்டியல் சமூகமெனில் அவர்கள் பதவியால் உயர்ந்து விடக்கூடாது என்று அரசாலேயே புறக்கணிக்கப்படுவதை உணர்த்தும், எதிர்க்கும் போராட்டம் என்றும் அரசு ஊழியர்கள் நலனுக்கானது என்பதைத் தாண்டி, பட்டியல் சமூகத்தின் முன்னேற்றத்தின் அடிப்படையை உரிமையை வலியுறுத்தும் போராட்டம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் அமைப்பின் செயலாளர் செந்தில்குமார் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவைச் சார்ந்த மணி உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் திரளானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: