சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனிடம் வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெறப்படும் பொது மக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்த மனுக்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினர். இதே போல சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் டாக்டர் சுந்தர் சேலம் தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில், தொலைந்து போன மற்றும் காணாமல் போன வீட்டு மனை பட்டாக்கள் குறித்து விண்ணப்பிப்பவர்களுக்கு கிராம கணக்குகளின் அடிப்படையில் உடனடியாக அவர்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தோராய பட்டாக்களுக்கு பதிலாக தூய வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், கிராம கணக்குகளில் உள்ள குளறிப் படிகளை சரி செய்து அதனை கணனியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் நீண்ட நெடுங்காலமாக வசித்து வரும் மக்களுக்கு இருக்கும் இடத்தினை அளவீடு செய்து அவர்களுக்கான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். மனுவினை பெற்றுக் கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் டாக்டர் சுந்தர் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தபோது, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், விசிக கெங்கவல்லி தொகுதி செயலாளர் முருகேசன், மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், வீரகனூர் நகர பொறுப்பாளர்கள் ரமேஷ் இளையராஜா, அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த முருகேசன் மற்றும் நத்த கரை பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: