ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் 76 வணிக சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் வெள்ளி விழா ஆண்டையொட்டி ஈரோடு நசியனூர் ரோடு வீரப் பம்பாளையம் விவேகானந்தா வீதியில் 2 மாடிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைசாமி. இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேட்டியா சக்தி மசாலா அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். கே.எஸ்.தென்னரசு அரங்கை முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உணவு அரங்கத்தை ஈரோடு இந்து கல்வி நிலையத் தின் தாளாளர் கே.கே.பாலுசாமியும், வெள்ளி விழா ஆண்டு கூட்டரங்கை ஒளிரும் ஈரோடு தலைவர் எம்.சின்னசாமி, கூட்டமைப்பு அலுவலகத்தை எம்.சி.ஆர். நிர்வாக இயக்குனர் எம்.சி.ராபின் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கூட்டமைப்பு நிர்வாகிகள். முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: