சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே அதிநவீன முறையில் ஆகில்ஸ் பிட்னெஸ் என்கின்ற யுனி செக்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடனும் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி மையத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தலைமை தாங்கினார். பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் சேலம் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய உடற்பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தனர்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆகில்ஸ் ஃபிட்னெஸ் யூனி செக்ஸ் பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும்,
இது போக காயம் மீட்பு, தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி, அதிகரித்த உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக தங்களது உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சூழல் தற்பொழுது எழுந்துள்ள நிலையில், இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து உன்னிப்பாக கவனம் செலுத்த உள்ளதாகவும், பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி நிலையம் மேற்கொள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் 31வது வார்டு திமுக செயலாளர் சையது இப்ராஹிம், 32வது வார்டு செயலாளர் கபிர், திமுக நிர்வாகி வதூது ரஹ்மான், முஹம்மது ஹக்கீம் ஆகியோர் உட்பட திமுக நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என திரளானோர கலந்து கொண்டு பயிற்சி மைய உரிமையாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: