S.K. சுரேஷ்பாபு.
சேலத்தைச் சேர்ந்த அரவிந்த் ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு.
தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிஇயக்கத்திற்காக பணியாற்ற தேர்வு.....
சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்த் அவர்கள் தன்னலன் பார்க்காமல் பிறர் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து ஏற்கனவே ஏராளமான விருதுகளை குவித்து வந்துள்ளார். தொடர்ந்து தனது பொது சேவைகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா அரவிந்த் என்கின்ற அரவிந்த் ராஜசேகரன், தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக தேர்வு தேர்வு செய்யப்பட்டு
தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி இயக்கத்திற்காக பணியாற்ற அவருக்கான பணி ஆணையினையும் அனுப்பி உள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
அந்த கடிதத்தில், 15.11.2024 முதல் 15.11.2026 வரை மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பின் தமிழ்நாடு முதன்மை ஒருங்கிணைப்பாளராக செய்துள்ளோம் என்பதனை மாநில தலைமை அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த இயக்கத்திற்கு பணியாற்றி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என இயக்கம் கேட்டுக் கொள்கிறது, மேலும் இவரை பணி அமர்த்தியதில் சந்தோஷப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சமூகம் மற்றும் வளர்ச்சியில் தாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்கள் சமூகத்தில் சிறப்பாக வாழ நாம் சில சட்ட வழிமுறைகளை வகுத்துள்ளோம். நமது இயக்கமானது கல்வி மற்றும் சமூக வளர்ச்சி போன்றவற்றில் ஆர்வமாக இந்தியா முழுவதும் உழைத்து கொண்டிருக்கிறது. மேலும் நட்புறவு போன்றவற்றை ஊக்குவிக்க உதவுகிறது. மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பானது இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை கருத்துக்கிறது. மேலும் நமது அடிப்படை முக்கிய கருத்து என்னவென்றால் மனித உரிமை, பொது உரிமை, அடிப்படை உரிமை, வயது மூத்தோர் நல உரிமை, சிறார்களுக்கான உரிமை, தொழிலாளர்கள் உரிமை, நுகர்வோர் உரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை முன்னெடுப்பதாகும். இந்த தேசிய அமைப்பின் மீது நம்பிக்கை மற்றும் பற்றுக் கொண்டிருக்க வேண்டும். மக்களது உரிமைகளை சரியாக கொண்டு சேர்ப்பீர்கள் என நம்புகிறது. உதவி தேவைப்படுபவர்களுக்கு எந்தவித புகார் இருக்கும் இடமின்றி உதவிட கேட்டுக்கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில், தேசிய தலைவர் மனித உரிமைகள் சமூக நீதி அமைப்பு டெல்லி, மும்பை மற்றும் H.R என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் சேலத்தை சேர்ந்த நாகா அரவிந்தன் என்கின்ற அரவிந்த் ராஜசேகரனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
0 coment rios: