இந்தக் கூட்டத்தில், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் முறையாக விநியோகிக்கப் படுதல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் சார்பில் நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, உயர்வுக்குப் படி உள்ளிட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இத்திட்டங்களின் மூலம் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, மழைக்காலம் என்பதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பல்வேறு போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அறிவுசார் மையங்களை பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனுக்கு கிடைக்கின்ற வகையிலும் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையிலும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜன் (வளர்ச்சி), முஹமது குதுரத்துல்லா (பொது), சாந்தாமணி (வேளாண்மை), இணை இயக்குநர் (வேளாண்மை உழவர் நலத்துறை) வெங்கடேஷ், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) அம்பிகா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட காவல்துறையினர், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: