சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக அரசின் சட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்குபெறும் மேடை நடன கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை, மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்களும் அடச்சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் சேலம் கருங்கல்பட்டி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் விஜய், உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை நடன கலைஞர்கள் ஆகியோருக்கு காவல்துறையினிடம் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய முறையான அனுமதி பெற்றவுடன் நிகழ்வில் ஏற்படும் தங்களைப் போன்ற நடன கலைஞர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தில் பயணிக்கும் உறுப்பினர்கள் திருவிழாக்களின் பொழுது பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் மேடை நடனம் ஆட வேண்டும்,, , தமிழக அரசு சட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் உள்ள விழிப்புணர்வு நாடக நடன நிகழ்ச்சியில் பங்கு பெறும் மேடை நடன நிகழ்ச்சியில் பங்கு பெரும் கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடன கலைஞர்கள் அவர்களுக்கு உண்டான குறைகளை உரிய லெட்டர் பேடு மூலம் ரப்பர் முத்திரையீட்டு நேரடியாக வழங்க வேண்டும்., , அந்த நகலை கலை பண்பாட்டுத்துறை மண்டல இயக்குனரிடமும் முதலமைச்சர் எண் தனிப்பிரிவு ஆகியோருக்கு முறையாக பதிவு தபால் மூலம் அனுப்பி அதற்கான ஒப்புதல் சீடை பெற்று பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.,
, கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்களும் நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், நழிவடைந்து வரும் இதுப கிராமிய மேடை நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தற்பொழுது சேலத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றுமா அல்லது நிராகரிக்குமா காலம் பதில் சொல்லும்.
0 coment rios: